கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் செய்த பிரச்சார செலவுகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுரங்கம் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியரினால் அனுப்பப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு ஆணைக்குழு பதிலளித்துள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 24.10.2024 அன்று குறித்த விபரங்களை மக்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தினத்தில் தேர்தல் ஆணைக்குழுவுவின் பிரதான அலுவலகம் அல்லது மாவட்ட அலுவலகங்களில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பான விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
Update :
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரச்சார செலவுகள் தொடர்பான முழு விபரம் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தில் வெளியிடப்பட்டது.
இணைப்பு : https://elections.gov.lk/Pages/PRE_2024_Candidate_Expenditure.html
No comments:
Post a Comment