Popular posts from this blog
எந்தவொரு வேட்பாளரும் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுவார்? தேர்தல் ஆணைக்குழு எமக்கு வழங்கிய பதில்
Pic - Onlanka நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும், அளிக்கப்படும் வாக்குகளில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை அதாவது குறைந்தது 50 வீதம் + 1 என்ற அடிப்படையில் பெற்றுக்கொள்ளாவிட்டால் எவ்வாறு ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என்ற கேள்வியினை நாம் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவிடம் தகவல் அறியும் விண்ணப்பம் ஊடாக கேட்டிருந்தோம். அதற்கு தேர்தல் ஆணைக்குழு பின்வருமாறு பதிலளித்திருந்தது. "மேற்படி விடயம் தொடர்பில் 1981 இலக்கம் 15 ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஏற்பாட்டின் 56 தொடக்கம் 63 வரையான பகுதிகளில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்." எனினும் குறித்த விடயமானது சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரமே தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ளது. Link - https://elections.gov.lk/ta/elections/election_types_pre_T.html அதனை விரிவாக உதாரணங்களுடன் வாசகர்களுக்கு இலகுவாக தெளிவுபடுத்துவதற்காக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம்.ரினோஸினால் அண்மையில் எழுதப்பட்ட கட்டுரையை இத்துடன் இணைக்கிறோம்.
Comments
Post a Comment