(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
கஹட்டோவிட்டவை சேர்ந்த எம்.ஆர்.எப்.ரிபா LLB (Hons), Attorney at Law அண்மையில் நீதிமன்ற உரைபெயர்ப்பாளராக நீதிச்சேவை ஆணைக்குழுவின் காதி பிரிவில் கடமைகளை பொறுப்பேற்றார்.
M.H.M.ரிபாய் மற்றும் பௌஸுல் கரீமா ஆகியோரின் புதல்வியான இவர் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ஆவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட நீதிமன்ற உரைபெயர்ப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை இவர் பெற்றிருந்தார்.
குறித்த பரீட்சை 2021 இல் நடைபெற்ற போதும் இரு வருடங்களாக பெறுபேறுகள் வெளியாகியிருக்கவில்லை. அதனை தொடர்ந்து குறித்த பரீட்சைக்கு தோற்றிய இச்செய்தியை எழுதும் ஊடகவியலாளரினால் அது தொடர்பில் விளக்கம் கோரி நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் விண்ணப்பம் (RTI) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் உரிய காலப்பகுதியில் பதில் கிடைக்காமையினால் குறித்த ஊடகவியலாளரால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீட்டு விண்ணப்பம் (RTI 10) சமர்ப்பிக்கப்பட்டதுடன், கோரிக்கைகள் பல முன்வைக்கப்பட்டதனை தொடர்ந்து 2023 செப்டம்பரில் பெறுபேறுகள் வெளியானது. (தொடர்பான செய்தி - https://shurangam.blogspot.com/2023/09/blog-post_24.html)
இந்நிலையில் கடந்த 2024 ஜூன் மாதம் குறித்த பதவிக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்த பலர் நாடளாவிய ரீதியில் பல்வேறு நீதிமன்றங்களில் உரைபெயர்ப்பாளர்களாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment